Monday, April 02, 2007

321. அநாகரிக அறிவிப்புப் பலகையும் ஆனந்த கும்மியும்

முதலில் எ.அ.பாலா டிஸ்கி மற்றும் எண்ணங்கள்:
---------------------------------------------------------------------------
கி.அ.அ.அனானி கீழே குறிப்பிட்டுள்ள கோயில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்ட செயலை வன்மையாக கண்டிக்கிறேன். சாதி துவேஷத்திற்கு தூபம் போடும் அந்தப் பலகை உடனடியாக தூக்கியெறியப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதற்கு நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.

நண்பர் பாலபாரதி அந்த போட்டோவை எடுத்துப் போட்டது தவறு என்றும் நான் வாதிட வரவில்லை! அதைத் தொடர்ந்து நடந்த வலைக்கூத்து பற்றியே கி.அ.அ.அ தன் பாணியில் எழுதியிருக்காரு ! A coin has two sides and it is imperative that an unbiased reader is given the opportunity to see an issue in different perspectives!

இந்த மேட்டர் குறித்த மாற்றுப் பார்வையாக நான் அதைக் கருதுவதாலும், அதனால் இங்கிருக்கும் சிலருக்காவது ஒரு 'புரிதல்' ஏற்பட வாய்ப்பிருப்பதாலும், கருத்துச் சுதந்திரத்தின் மேல் எனக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையாலும், "யான் பெற்ற இன்பம், (மன்னிக்கவும், எப்போதும் போல் சொல்லி விட்டேன்!) தெளிவு பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கிலும் கி.அ.அ.அனானியின் மேட்டரை பதிவாக இடுகிறேன்!!! பதிவுத் தலைப்பு மட்டும் என்னுடையது. மேட்டர் கி.அ.அ. அனானியுடையது !

என்னிடம், யார் மீதும், தனிப்பட்ட வாகையில் காழ்ப்பு இல்லை என்பது, என் வாசகர்களுக்கும், என்னை அறிந்த நண்பர்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன்!

கி.அ.அ.அ அவர்களும், இப்பதிவின் இறுதியில் ஒரு டிஸ்கி தந்துள்ளார் :) இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! நானும் அவ்வப்பொழுது ஆட்டத்தில் கலந்து கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன்!!! கி.அ.அ.அ மேட்டர் பதிவாக கீழே !
************************************
சம்பந்தப்பட்ட போர்டு போட்டோ இங்க இருக்குங்கோவ்... நண்பர் பாலபாரதி's posting

ராமேசுவரம் கோவிலில் இப்படி ஒரு போர்ட் மாட்டப்பட்டிருப்பதை படம் பிடித்து பதிவு போட அதற்கு இன்னொரு 'அதிர்ஷ்ட'ப் பதிவர் "செருப்பாலடி" (இவரு போர்டு மாட்டுனவனையா இல்லை பதிவு போட்டவனையா, யாரை செருப்பாலடிக்க சொன்னார் என்பது அந்த ராமநாத சாமிக்கே வெளிச்சம்) என்று ஒரு பதிவு போட அந்த ஜல்லியை இன்னுமொரு 'திரு'வாளர் நீளமா நீட்டி, தேசிய ஜல்லியெல்லாம் அடித்து, கான்கிரீட் கலவை போட்டு இப்படி ஆளாளுக்கு தங்களது சமூக அக்கறையை பலமாக பறை சாற்றியிருக்கிறார்கள்.

இவர்களிடம் நாம் கேட்பதெல்லாம் இரண்டே கேள்விகள்:

1. ஆட்சியில் இருந்து கொண்டிருப்பது சமூக நீதி காக்கும் அரசு தானே, அதுவும் 40 வருடங்களுக்கு மேலாக.. கோவில் மற்றும் அதை நிர்வகிக்கும் அறநிலையத் துறை எல்லாம் இவர்கள் கையில் தானே இருக்கிறது.. அப்புறம் இந்த போர்டை அகற்றவோ அல்லது அப்படி எழுதி வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கவோ ஏன் துப்பில்லை ?

2. இதை மெனக்கெட்டு போட்டோவெல்லாம் எடுத்து வந்து பிளாகில் பதிப்பித்து விவாதிக்கும் பதிவர் திலகங்கள், பின்னூட்டச் சக்ரவர்த்திகள் ஆகியோர் "உன் ஆள்" தான் அதை வைத்தான் என்று வெட்டிக் கூச்சல் போட்டு பிலிம் காட்டுவது தவிர அந்த மாதிரி துவேஷம் வளர்க்கும் போர்டை அகற்றவும், அதை வைத்தவரை அடையாளம் கண்டு தண்டிக்கவும், அதனால் சமூக நீதி காக்கவும் செய்ய ஏதேனும் துரும்பையாவது கிள்ளிப் போட்டார்களா ?

இம்மாதிரி கேள்விகளுக்கு பதில் நிச்சயம் வராது என்று தெரியும்... ஏனென்றால், இந்த மாதிரி விஷயங்களை வைத்துத் தானே இங்கு அரசியல் வியாபாரம் ஜாம் ஜாமென்று நடக்கிறது.. பெரியார் சிலையை ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் வைக்க போராடி வெற்றி பெற்றதாக மார் தட்டும் கழகச் சிங்கங்களுக்கு, (அதை விடவும்) இந்த போர்டையும் இதை வைத்தவர்களையும் தூக்கியெறிந்தால் பெரியார் கொள்கைகளையும் அவர் காக்கப் போராடிய சமூக நீதியை சிறிதளவேனும் முன்னெடுத்துச் சென்றதாக இருக்கும் என்ற 'சிற்றறிவு' கூடவா இல்லாதிருக்கும் ?

இணைய கும்மிகளிடமும் அதே போக்கு தானே நிலவுகிறது.. அதனால் தான், போட்டோ பிடித்து 'படம்' காட்டுவதோடும், பார்ப்பனீயத்தை எதிர்க்கிறேன் என்ற போர்வையில் பார்ப்பனர்களை நாலு திட்டு திட்டி விட்டு, நமக்கு நாமே திட்டத்தில் நாலு பின்னூட்டமும் போட்டு முதுகு சொறிந்து கொண்டு, சமூக நீதியைக் காப்பாற்றி விட்டதாக மார் தட்டிக்கொள்வதோடும், விவாதிக்கப்படும் விஷயம் abrupt-ஆக நின்று போய் விடுகிறது. ஏனென்றால் இவர்களெல்லாம் ஜாதீயத்தை, மன்னிக்கவும், பார்ப்பனீயத்தை ஐடியலாஜிகல் தளத்தில் எதிர்ப்பவர்கள்.. Meaning, வெட்டி அரட்டை அடித்து ஜால்ரா தட்டுவார்கள்.. கும்மியடிப்பார்கள்.. ஜல்லி அடிப்பார்கள், அதோடு சரி.

இவர்கள் இந்த மாதிரி போர்டையும் அகற்ற (அல்லது அதற்கான முயற்சியெடுக்க) மாட்டார்கள்... நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த பள்ளிகளில் "இரட்டைப் பானை" மற்றும் டீக்கடைகளில் "இரட்டை டம்ளர்" பற்றியெல்லாம் பேசாமல் "திரு"ட்டு மெளனம் சாதிப்பார்கள் (அல்லது) தங்களை அம்மாதிரி விடயங்களிலிருந்து வி"லக்கி"க் கொண்டு எஸ்கேப் ஆவார்கள் :) (ஸ்மைலி எ.அ.பாலா போட்டது!!!)

ஆட்சி கையில இருந்தும் ஒண்ணும் கழட்ட முடியாம (போர்டை சொன்னேங்க ;-)) இப்படிப்பட்ட கையாலாகாதவனா இருக்கமே அப்படீன்னு வேணா ...... அடிச்சுக்கிடலாம்!

இதுக்கு "நான் பார்ப்பனனில்லை.. இந்த போர்டை நான் வைக்கவில்லை / சத்தியமா ஆதரிக்கவில்லை, இந்த போர்டை வச்சவன் நாசமாப் போக நானும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்"

இப்படியெல்லா டிஸ்கி போடணும் தானே... சரி மக்கா, அப்படியே போட்டுருவோம்.
*************************************

(எ.அ.பாலா: கி.அ.அ.அ. நாத்திகர் இல்லைன்னு அவரது டிஸ்கி காட்டிக் குடுத்திருச்சு!)

*** 321 ***

19 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment!

said...

Yours truly 'கி.அ.அ.அனானி விளாசல்'

லக்கிலுக் said...

அருமையான பதிவு!!!

இதை "விட்டுது சிகப்பிலேயே" போட்டிருக்கலாம் :-))))

said...

பாலாஜி அவர்களுக்கு

பதிப்பித்தமைக்கு நன்றி என்று மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்கிறேன்

வேலையில் கொஞ்சம் பிஸி....மற்றவை பிறகு

கி.அ.அ.அனானி

enRenRum-anbudan.BALA said...

//
இதை "விட்டுது சிகப்பிலேயே" போட்டிருக்கலாம் :-))))
//
Good one :)))))))))))))))

said...

அண்ணே பாலா,

ஜல்லி கும்மி அடிக்கற ஆளுங்களை விடுங்க.

அந்த போர்டு அங்கே இருக்கது உங்களுக்கு ஓகே வா இல்லையா?

OK ன்னா இதோட நிறுத்திக்கறேன். இல்லைன்னா அதை கழட்டறதுக்கான உங்க முயற்சி கருத்து என்ன? அதைப்பத்தி ஒரு வரியும் காணோம்!

ம்ம்ம்.. ஜல்லி அடிக்கறாங்க கும்மி அடிக்கறான்னு சொல்லறதுக்கு இன்னொரு ஜல்லிப்பதிவு.

- கி.அ.அ.அனானி யோட ஒன்னுவிட்டா அத்திம்பேர் பையன்

Hariharan # 03985177737685368452 said...

பிராமணாள் தவிர யாரும் உள்ளே வரக்கூடாது எனும் ராமேசுவர கோவில் மடப்பள்ளி விஷயத்தில் படம் காட்டி செருப்படி நடத்தும் இதே சுயமரியாதை, பகுத்தறிவு நபர்கள் "வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை" என்பதை அங்கீகரித்துக் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் அமர்வார்கள்!

போலித்தனமான சுயமரியாதை, பகுத்தறிவு முழக்கமான சாதி ஒழிப்புக் கொள்கைக்குச் செருப்படி!

said...

""Anonymous said...

அண்ணே பாலா,


- கி.அ.அ.அனானி யோட ஒன்னுவிட்டா அத்திம்பேர் பையன் ""

பாலாஜி அவர்களிடம் கேட்க்கப் பட்டிருந்தாலும் இந்த அனானி என் மருமகனாக ( ஒண்ணு விட்ட அக்கா பையனானதல்) இருப்பதால் நானே பதில் சொல்கிறேன்.

"""அதை கழட்டறதுக்கான உங்க முயற்சி கருத்து என்ன?""" அப்படீன்னு கேட்டிருக்கார் மருமகப்புள்ளை.

மேட்டரை கரெக்டா புடுச்சுட்டியே கண்ணா...இதுதான் இந்தப் பதிவோட நோக்கமே..படத்தை போட்டவங்க இந்த மாதிரி ஏதாவது உருப்படியான விவாதத்தை வைத்திருந்தால் அருமையான யோசனைகளும், கருத்தாக்கங்களும் வந்திருக்கும்.. ஆனால் சும்மா பார்ப்பனீய ஜல்லியடித்ததை சுட்டிக் காட்டவே இந்த எதிர் கில்லி.

இப்பவும் கும்மியடிப்பதை நிறுத்தி விட்டு பதிவர்கள் உண்மையிலேயே இப்படிப் பட்ட பலகைகளை (அந்தக் கோவிலில் மட்டுமல்ல..)எங்கிருந்தாலும் அகற்ற என்ன செய்யலாம் என வாதம் வைத்தால் ஆக்கபூர்வமான யோசனை வழங்குவதோடு மட்டுமல்லாது இப்படிப் பட்ட நல்ல காரியங்களுக்கு ஆதரவும் குவிந்திருக்கும்..பதிவு போட்டவங்களை கேட்க சொல்லு மருமகனே..போர்டை அகற்ற என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதோடல்லாமல் செய்தும் காட்டுகிறேன்.

அது சரி ""ஒண்ணு விட்டா"" நீ அத்திம்பேர் பையனா ?விட்டுட்டா போச்சு :)

கி.அ.அ.அனானி

குழலி / Kuzhali said...

பாலா அந்த போர்டை கழற்ற அவர்கள் என்ன செய்தார்கள் வலைப்பதிவில் கும்மி அடிக்கிறார்களே என்று சொன்ன நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றீர் இப்போ? அந்த போர்டை கழற்ற ஏதாவது முயற்சி எடுத்தீரா? ஓ ஓ அது கி.அனானி எழுதியதா? :-) சரி கி.அனானி நீர் என்ன செய்தீர் ஓய்....

கி.அனானியின் இந்த கும்மி பற்றி ஒரு பதிவு எழுதும் அளவிற்கு விசயமிருக்கு, அதை ஒற்றை பின்னூட்டத்தில் போட விருப்பமில்லை... அதனால விலாவரியா பதிவு எழுதுகிறேன்.....

said...

பாலா,

வேண்டாம் விடுங்க.. உங்களுக்கு இந்த விளையாட்டு சரியா வெளையாட வரலை!

இப்படித்தான் ஒருத்தரு பயங்கர வெவரமா வெளையாடறேன்னுட்டு மனோகர் ஜோஷியாகி பல்லிளித்த கதையை யாரும் மறக்கலை..

எந்த கருத்தா இருந்தா என்ன? உங்க பேருலயே எழுதுங்களேன்.

சரியான வாதம்/கருத்து வைச்சா நீர்வந்து செயல்ல காட்டி போர்டை கழட்டுவீரா?! அதாவது அந்த போர்டு ஏன் அங்க இருக்குன்னு உமக்கு தெரியாது. மத்தவங்க கும்மியடிக்காம தெளிவா ஆக்கப்ப்பூர்வமா எடுத்துச்சொன்னா உடனே நீங்க அந்த உலக உண்மைய புரிஞ்சுண்டு காரியத்துல இறங்கீரூவீர்! ஒரே தமாசையா உம்மோட... "அவங்களுக்குத்தான் அறிவில்லை. கும்மி அடிக்கறாங்க. நீர் என்னத்த கழட்டப்போறேன்னு சொல்லலையேன்னு" கேட்டா... மொதல்ல அவனை கக்கா போகச்சொல்லு. அப்பறம் நான் வந்து கழுவறேங்கறீர்! தெளிவா எழுதறதா நெனைச்சுண்டா மட்டும் போறாது. அதைப் வாசிச்சுட்டு மத்தவா கேள்வி கேட்டா பதில் சொல்ல வக்கிருக்கனும்.

// ""ஒண்ணு விட்டா"" நீ அத்திம்பேர் பையனா ?விட்டுட்டா போச்சு :)
//
ஆத்துல சொல்லிக் கொடுக்கலையா? இப்படியெல்லாம் கண்ட இடத்துல விடப்படாது ஓய்! பார்த்து... :)

enRenRum-anbudan.BALA said...

கி.அ.அ.அனானி யோட ஒன்னுவிட்டா அத்திம்பேர் பையன், குழலி,

வருகைக்கு நன்றி. மாலையில், விளக்கமாக பதில் தருகிறேன். தேவையென்றால், தனிப்பதிவாக :) இப்போது கொஞ்சம் பிஸி!

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

Hariharan,

Thanks !

said...

எனக்கென்னவோ இது மற்றுமொரு பாலபாரதி புரட்டாகவே தோன்றுகிறது... ஏனென்றால், ஒரு நண்பர் சொன்னாராம், இவர் படம் எடுத்தாராம். அப்படியானால், அவர் இதை அங்கு அல்லவா பேசி விளக்கம் பெற்றிருக்க வேண்டும்..

ஏனென்றால் இந்த வாசகங்கள் அடங்கிய இடம் ஒரு தனியார் இடம் அல்லவே. திராவிட அரசாங்கத்தில் ஆளுகையில் உள்ள இடம்தானே. இதை எப்படி நம்புவது? அப்படி உண்மையாக இருக்குமானால், அதற்கு அரசுதானே பொறுப்பு. அதற்கு ஏன் தனிமனித விருப்பு வெறுப்புகளை ஒரு சமுதாயத்தின் மீது காட்டவேண்டும்...

இந்த பா.பா அவர்களின் பதிவில் தன் மனவிகாரங்களை சொறிந்துகொள்ளும் ஒரு பொருள்தானே தவிர வேறொன்றும் தென்படவில்லையே.

உண்மையில் சொல்லப்போனால், "பிறாமணா" தனியாக ஒரு அறையில் அவர்களுக்கே exclusive ஆக இருக்க விரும்பினால் அதை வரவேற்கத்தான் வேண்டும். புரையோடிப்போன திராவிட அரசியலில் இன்று அவர்கள் மட்டுமே "பிற்படுத்தப்படாத" பிற்பட்டவர்கள். அவர்கள் தங்கள் தற்காப்புக்காக பிறரிடமிருந்து காத்துக்கொள்ள தங்களுக்கென்று ஒரு தனியிடம் கோவிலில் அமைத்து வாழுகிறார்களோ என்னவோ....

உண்மைத்தமிழன் said...

அண்ணன் பாலா அவர்களுக்கு,

அந்த போர்டு இருக்கும் தோற்றத்தைப் பார்த்தால் நீண்ட பல வருடங்களாகவே அங்கு மாட்டப்பட்டிருக்கும் போலத் தெரிகிறது. இராமேஸ்வரம் கோவில் இந்து அற நிலையத்துறைக்குச் சொந்தமானதுதான், நிர்வாகத்திற்குட்பட்டதுதான் என்று நினைக்கிறேன். இன்றுவரை அது அப்படியே இருக்கிறது என்றால் இது கண்டிப்பாக திராவிடத்தின் பெயரால் ஆளுவோரின் இரட்டை வேடப் போக்கைக் காட்டும் ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான். பெரிய எடுத்துக்காட்டு 1968-ல் அண்ணா அவர்களின் ஆட்சிக் காலத்தில் இந்து அற நிலையத்துறைக்கான மான்ய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசும்போது கோவில்கள் இருக்கும்வரை எந்த ஒரு அரசும் அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை செய்துதான் தீர வேண்டும் என்றார். இதற்கு பத்திரிகை நண்பர்கள் தந்தை பெரியாரிடம் கேள்வி கேட்க அவர் சொன்ன பதிலும் இராமேஸ்வரம் கோவிலைப் போலவே பிரசித்தி பெற்றதுதான் "மாமியாருக்குத் தொடைல புண்ணாம். மருமகன்தான்யா ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்ன்னாங்கலாம்.." கரெக்டுதானே..

ஆகம விதிகளைச் சுட்டிக்காட்டி ஆள்வோரை அங்கிருப்பவர்கள் அடக்கி வைத்திருக்கலாம். ஆகம விதிகள் இப்படி மனிதருக்குள் பேதங்களைப் பிரித்துச் சொல்வதால்தான் ஜாதி, மதப் பிரச்சினைகளை அனைவருமே எழுப்புகிறார்கள். இது தவிர்க்க முடியாதது. அரசு நினைத்து இந்த மூடத்தனத்தை ஒழித்து அனைவரும் மனிதர்களே என்று கோவிலிலிருந்தே ஆரம்பித்தால் மட்டுமே இம்மாதிரி பிற்போக்குத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால் இந்த திராவிடத்தின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை.. நான் அடிப்பது போல் நடிக்கிறேன்.. நீ வலிப்பது போல் நடி.. என்று நடந்து கொண்டால் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் சரி.. சாதிப் பூசல்கள் தமிழ்நாட்டில் இப்படியேதான் இருக்கும்.

said...

பாலாஜி சார்,

நீங்க நான் இல்லை அப்படீன்னு விளக்குறதுக்கு ஒரு பதிவா?அதுல என்னுடைய எழுத்துக்கு ரசிகன்னு :) வேற...என்ன நக்கலா ?

இத்த்தோடா:)

கி.அ.அ.அனானி

ஜோ/Joe said...

//கேட்டா... மொதல்ல அவனை கக்கா போகச்சொல்லு. அப்பறம் நான் வந்து கழுவறேங்கறீர்!//

:))))))

enRenRum-anbudan.BALA said...

அனானி, உண்மை தமிழன்,

வருகைக்கும், விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி. ஏதோ, எல்லார்க்கும் புரிஞ்சா சரி தான் !

கி.அ.அ.அ.,

என்ன பண்றது ? என் தலையெழுத்து ;-)

enRenRum-anbudan.BALA said...

ஜோ,
வருகைக்கும், சிரிப்புக்கும் நன்றி :)

அடுத்த பதிவையும் வாசிங்க !

http://balaji_ammu.blogspot.com/2007/04/322.html

சிரிப்பா சிரிப்பீங்க ;-)

எ.அ.பாலா

said...

good disclaimar :)))))))))))))

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails